திமுக பையா கவுண்டர், ஈரோடு நந்தா கல்விக்குழுமம் ஐ.டி ரெய்டு விவகாரம்... கொள்ளை பீஸ் வசூல் செய்தது அம்பலம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 22 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் முதல் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அவருக்கு சொந்தமாக உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் உள்ள நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வரும் நிலையில், இந்த சோதனையில் மொத்தமாக 100 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

வருமான வரிஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 22 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நந்தா கல்விக்குழுமத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்தனைகள் நடந்துள்ள அம்பலமாகியுள்ள நிலையில், ரூ.5 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் நந்தா கல்வி நிறுவனம் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து, குறைந்த கட்டணத்தை அரசிடம் கணக்கில் காண்பித்து வந்தது தெரியவந்தது. இந்த பணம் மூலமாக பல நிறுவனங்களில் முதலீடு செய்யப்ட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Nandha Educational Trust Income Tax Raid


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal