வாய்க்கால் வெள்ளத்தில் சிக்கிய 30 தொழிலாளர்கள்.. தீவிர மீட்பு பணியில் தீயணைப்பு படை.!
Erode flood In factory 30 employees stuck in Company
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 30 நபர்களை மீட்க தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கீழ் பவானி பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் கரை உடைந்து தனியார் துணி உற்பத்தி மில்லில் நீர் புகுந்தது. பெருந்துறை அருகே இருக்கும் இந்த தனியார் துணி உற்பத்தி மில்லில் பணி செய்து வந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளநீரில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
English Summary
Erode flood In factory 30 employees stuck in Company