மத்திய அரசின் கொத்தடிமை அரசு; NLC விவகாரத்தில் "மக்கள் மீது அடக்கு முறை" ஏவி விடுவதா..!! ஈபிஎஸ் கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருந்து கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடி பிரச்சனையிலும் தொடர்ந்து பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலையும் காட்டும் திமுக அரசு..!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்எல்சி நிர்வாகம் அத்துமீறி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கும் அதற்கு துணை போகும் திமுக அரசுக்கும் தனது அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "காங்கிரஸ் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி புரியும் போது என்எல்சி நிறுவனம் தனது பங்குகளை தனியாருக்கு விற்க முயன்ற பொழுது ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார் கைக்கு செல்வதை தடுக்கும் இதயம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அந்தப் பங்குகளை தமிழக அரசின் சார்பில் வாங்கினார்கள். 

கடந்த 2000-வது ஆண்டு முதல் இன்று வரை என்எல்சியின் விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு, நிலம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு முழுமையாக வழங்கப்படாத அவல நிலை நிலவி வருகிறது. மேலும் பல்வேறு விரிவாக்க பணிகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று (09.03.2023) கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உள்ளிட்ட நில உரிமையாளர்கள் சிறை வைக்கப்பட்டு டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன் செய்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபட்டதை அதிமுக சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறேன். 

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் போது என்எல்சி நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கைய படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த 22 மாத விடியா ஆட்சியில் என்எல்சியின் மக்கள் விரோதப் போக்கு துணையாக இருந்து தாலாட்டு பாடிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடலூர் மாவட்ட திமுக அமைச்சர் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். கடலூர் மாவட்ட மக்களையும் விவசாயிகளின் நலனையும் மதிக்காத இந்த நிர்வாக திறனற்ற விடியா ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது.

என்எல்சி நிர்வாகத்தின் அடாவடித்தனமான செயல்பாடுகளை கண்டித்து எதிர் குரல் எழுப்பும் மக்களின் குரல் வலையை தன்னுடைய ஏவல்துறையான காவல் துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாகும். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் மரபுசாரா எரிசக்தியான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவற்றை பெருக்குவோம். இதனால் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டிற்கான நிலக்கரி தேவை குறையும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

மத்திய அரசு எதிர்த்து போர்க்கொடி தூக்குவது போல் தங்களை சுயநல லாபத்திற்காக நடக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்எல்சி நிர்வாகத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்டகேடானது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை அடக்குமுறை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

சமீபகாலமாக வாரந்தோறும் விடியா அரசின் அமைச்சரும் அதிகாரிகளும் விவசாயிகளை அழித்து மிரட்டுவதை விட்டுவிட்டு மத்திய அரசோடும், என்எல்சி நிர்வாகத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், R&R சட்டப்படி குழு அமைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்கவும் நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும் அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும் உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இந்த விடிய அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல் கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடி பிரச்சினையிலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபடாமல் அதிமுக அப்பகுதி மக்களுக்கு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condemns DMK govt over NLC issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->