EPS பிறந்தநாள் விழா..சேலம் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
EPS birthday celebration AIADMK members in Salem distributing welfare assistance and celebrating!
சேலம் மாவட்டம் வீரபாண்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு புடவைகள் வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் வீரபாண்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில்அதிமுக கழக பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டுசேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்இளங்கோவன் அறிவுறுத்தலின் படிமேற்கு ஒன்றிய செயலாளர் வருதராஜ் தலைமையில் சேலம் புறநகர் மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பி.வீ.பெருமாள் முன்னிலையில் உத்தமசோழபுரம் மாரியம்மன்,கோவில் காளியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து ஏழை எளியோருக்கு புடவைகள் வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து யூனியன் அலுவலகம் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில்,வட பத்ர காளி அம்மன் கோவில், ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. மற்றும் மழங்காடு பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நல்ல திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.எஸ். ஆர்.பழனிசாமி,பாலமணிகண்டன்,ரகு ,கோபி,மகேந்திரன்,பிரகாஷ், சுப்பிரமணி,மோகன், அருள்மணி,மற்றும் கிளை நிர்வாகிகள் பழனிசாமி, மூத்த முன்னோடிகள்,கட்சி நிர்வாகிகள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
English Summary
EPS birthday celebration AIADMK members in Salem distributing welfare assistance and celebrating!