மனமகிழ் மன்ற உரிமக் கட்டணம் இருமடங்காக உயர்வு...! - அரசாணை வெளியீடு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களை நடத்துவதற்கான கட்டண அமைப்பில் மாநில அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக எஃப்எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணம் ஒரே அடியாக இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை ரூ.15 லட்சமாக இருந்த சிறப்புக் கட்டணம், தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மதுபான உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், உரிமக் கட்டணம் ரூ.30 ஆயிரமாகவும் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையிலும் கட்டண அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.25 லட்சம் சிறப்புக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிப் பகுதிகளில் இயங்கும் மன்றங்களுக்கு ரூ.15 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண மாற்றம், அரசின் வருவாயை உயர்த்துவதோடு உரிம நடைமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Entertainment hall license fee doubled Government Order issued


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->