ஆன்லைன் கேம் விளையாடிதை கண்டித்த தாய்.! என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் ஆன்லைன் கேம் விளையாடிதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் பாலகுமார் (18) திருச்சி சமயபுரம் அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாலகுமார் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் எப்பொழுதும் பாலமுருகன் செல்போனில் பிரீ பையர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனை பாலகுமாரின் தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பாலகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த பாலகுமாரின் தாத்தா அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பாலகுமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering student commits suicide in Perambalur


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal