எஞ்சினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எஞ்சினியரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 6ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முன்வந்துள்ளனர். விரைவில் கலந்தாய்வு செயல்முறைகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில், கலந்தாய்விற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட 10 இலக்க எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ள, [tneaonline.org](http://tneaonline.org) இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம் என மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Engineering Counseling random number 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->