ஆன்லைன் சூதாட்டம்: பணத்தை இழந்த இன்ஜினியருக்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஆர்.வி.எல் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர்(29) இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்ததால், லட்சகணக்கான பணத்தை இழந்துள்ளார்.

மேலும் இதற்காக கடன் வாங்கியதால், இவருக்கு கடன் பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த சங்கர் வாழ்க்கையில் வெறுப்படைந்து ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் மேனேஜர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஓட்டல் அறையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சங்கர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineer commits suicide for online gambling in kovai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->