1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: தப்பியோடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!
1,100 kg of ration rice seized Police on the lookout for the fleeing woman
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை மாவட்ட போலீசார் கருத்துக்கணித்து தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து வருகின்றார்.இந்தநிலையில் அரசி கடத்தல் நடைபெற்றுள்ளது,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது 26 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.முன்னதாக போலீசாரை பார்த்ததும் வீட்டில் இருந்த பெண் தப்பி ஓடினார். தப்பி ஓடியவர் முருகன் மனைவி வெள்ளத்தாய் என்பதும், இவர் அப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து, வெளி மாநிலத்திற்கு விற்பனைக்காக கடத்துவது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் பறிமுதல் செய்த ரேஷன்அரிசி மூட்டைகள் மற்றும் பைக்கை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடி தலைமறைவாக உள்ள வெள்ளத்தாயை தேடி வருகின்றனர்.
English Summary
1,100 kg of ration rice seized Police on the lookout for the fleeing woman