நொடி பொழுதில் உயிர் தப்பிய 139 பயணிகள்..!! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்திலிருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு!

சென்னை விமான நிலையத்திலிருந்து தோகாவுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் 139 பயணிகளுடன் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாரானது. விமானம் நிலையத்தின் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்குச் செல்லும் பொழுது விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்துள்ளார். உடனே இது குறித்து கட்டுப்பாட்டு வரைக்கும் தகவல் அளித்தவர். இனி இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு இழுவை வாகனம் மூலம் விமானம் நடைமேடைக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 139 பயணிகளும் தரையிறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

விமானப் பொறியாளர்கள் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி இன்று மாலைக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை அல்லது இரவு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் புறப்பட செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானம் புறப்பட இருந்த கடைசி நொடிகளில் இயந்திரத்தில் இருந்த கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 139 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட பழுது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engine failure in the flight from Chennai to Doha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->