நம்மை ஆர்ப்பரிக்க வைக்கும் இடம்.. கண்ணாடி போல் காட்சியளிக்கும் எமரால்டு ஏரி.! - Seithipunal
Seithipunal


நீலகிரியில் இருந்து ஏறத்தாழ 37கி.மீ தொலைவிலும், ஊட்டியில் இருந்து ஏறத்தாழ 19கி.மீ தொலைவிலும், அவலாஞ்சி ஏரியில் இருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவிலும் தேயிலை தோட்டங்கள் சூழப்பட்ட அமைப்பில் அமைந்துள்ள ஏரிதான் எமரால்டு ஏரி.

எமரால்டு ஏரி இந்த வட்டாரத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும். மேலும் இந்த ஏரி பல்வேறு மீன்களாலும், இங்கு காணப்படும் பறவைகளாலும் பிரபலமானது. 

கண்ணாடி போன்ற மிக மிக மென்மையான ஆரவாரமில்லா அலைகளால், நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது எமரால்டு ஏரி.

இந்த ஏரிக்கு அருகில் இருந்து கதிரவன் தோற்றத்தையும், மறைவையும் காண்பது கண்ணுக்கினிய காட்சி என அறியப்படுகிறது.

ஏரியைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு பார்வையாளர்களால் தேயிலைப் பொருட்களை வாங்க முடியும்.

இருபுறமும் மலைகளால் சூழப்பட்டும், காற்றின் வேகத்தைப் பொறுத்து ஏற்படும் அலைகளும் நம் மனதை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.

குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக இருந்து வர ஏற்ற இடமாக அமைந்து அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது இந்த ஏரி.

இந்த ஏரிக்கு அருகில் அவலாஞ்சி எனும் சுற்றுலாத்தலமும் உள்ளது.
 

English Summary

emerald lake in tamil nadu


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal