வனத்துறையினருக்கு போக்கு காட்டிய யானை! பள்ளியை சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு!
elephant showed off its prowess forest department It caused stir roamed around school
ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனச்சரகத்தில் அதிக அளவில் வசித்து வருகின்றன.அண்மைக்காலமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு தாளவாடி அடுத்த சிக்கலி கிராமத்தில் காட்டு யானை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு கிராம மக்களின் நிலங்கள் வழியாக குடியிருப்பு நோக்கி வந்த ஒற்றை யானையை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, அச்சத்திலும் மூழ்கினர்.
இதனிடையே,சிக்கலி கிராமத்திலுள்ள அரசு பள்ளி அருகில் அந்த காட்டு யானை சுற்றி வந்தது. நீண்ட நேரமாக அப்பகுதியை யானை சுற்றி வந்ததால், வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வனத்துறையினருக்கு அதே பகுதியில் மீண்டும் மீண்டும் சுற்றி வந்து போக்கு காட்டியது.
இதையடுத்து வனத்துறையினர் அதிக சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பிறகே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
English Summary
elephant showed off its prowess forest department It caused stir roamed around school