இருவர் மட்டுமே வசிக்கும் பசுமை வீட்டிற்கு ரூ.91,130 மின் கட்டணம்!
Electricity bill of Rs91130 for green house
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் முகமது பாத்து. இவர் தனது தந்தை உதுமான் கனிவுடன் அரசு மானத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார். மாதந்தோறும் இவருக்கு சராசரியாக 65 ரூபாய் மட்டுமே மின் கட்டணமாக வரும். கடந்த இரண்டு மாதங்களாகவும் இதே அளவு மின்கண்டனத்தை கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மின்வாரியத்தில் இருந்து அவருடைய மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் மின் கட்டண தொகையாக ரூ.91,130 செலுத்த நவம்பர் 5 கடைசி நாள் என குறிப்பிட்டு வந்துள்ளது.

இதனால் மின்சாரம் ஷாக் அடித்தது போல் அதிர்ச்சி அடைந்த முகமது பாத்து நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார். மின்வாரிய அதிகாரிகளிடம் கடந்த இரண்டு மாதங்களாக தனக்கு 65 ரூபாய் மட்டுமே மின்சார கட்டணம் வந்துள்ளது. எங்கள் வீட்டில் இரண்டு விளக்குகள் மட்டுமே எரியும் பொழுது எப்படி 91 ஆயிரம் மின் கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி எப்படி வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு ஏற்பட்டு இருக்கலாம் என்று விளக்கம் அளித்தனர். மேலும் இரண்டு நாட்களில் உண்மையான மின் கட்டண அளவுக்கான ரசீது தங்களுக்கு வந்து சேரும் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் துலுக்கர்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Electricity bill of Rs91130 for green house