" மினிலோடு வண்டியா இல்ல சாராய குடோனா "?..388 லிட்டர் எரிசாராயம் பிடிப்பட்டது.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் பகுதி சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மினி லோடு வண்டியை கிருஷ்ணவேணி தலைமையிலான குழு சோதனை செய்தனர்.

சோதனையில் ஈடுபட்டபோது, வாகனத்தில் 388 லிட்டர் மெத்தனால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அதிகாரிகள் வாகன ஓட்டுனரிடம் கேள்வி கேட்டபோது, ஓட்டுனர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த பறக்கும் படை குழுவினர், வண்டியை பறிமுதல் செய்து திருப்போரூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் பிடிபட்ட 388லிட்டர் மெத்தனால் கேன்களை ஒப்படைத்தனர். உரிய ஆவணம் இன்றி மெத்தனால் எடுத்து வந்த காரணத்திற்காக ஓட்டுனரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election flying squad searched van driver arrested


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->