கிருஷ்ணகிரி || கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து - 8 பேர் படுகாயம்.!
eight college students injured for accident in krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி பேருந்தில் அன்றாடம் சென்று வருவது வழக்கம். அதன் படி இன்று காலை வழக்கம் போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து பள்ளிப்பட்டி அருகே உள்ள சக்கர ஆலை வழியாகச் சென்றது.
அப்போது பேருந்து அம்மாபாளையம்-ஜாலிகாடு பிரிவு சாலையில், சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் முன்பக்கம் அமர்ந்திருந்த எட்டு மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
eight college students injured for accident in krishnagiri