முட்டை புதிய உச்சம்..வரலாறுகாணாத உச்சபட்ச விலை! எகிறிய முட்டை விலை..!
Eggs hit new high historical high price Egg prices soar
நாமக்கல் கோழிப்பண்ணை சந்தையில் முட்டை விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்வு காண, ஒரு முட்டை ரூ.6.20க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 55 ஆண்டுகால நாமக்கல் பண்ணை வரலாற்றிலேயே அதிகபட்ச கொள்முதல் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மிகப்பெரிய கோழிப் பண்ணை வட்டாரமான நாமக்கலில் தினமும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை
தமிழக அரசின் சத்துணவு திட்டம்
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள்
பல்வேறு வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி
மற்றும் மாநிலத்திலுள்ள பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகள் நெருங்குவதால் கேக், பிஸ்கட், பேக்கரி பொருட்கள், இனிப்புகள் தயாரிப்பில் முட்டை தேவை திடீரென அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த தேவையே விலை உயர்வுக்குக் காரணமாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
கொள்முதல் விலை உயர்வுடன், சில்லறை சந்தையில் ஒரு முட்டை ரூ.8 வரை விற்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும், சில்லறை வாங்குபவர்களுக்கு இது கூடுதல் சுமையாகிவிடும் என்பது உறுதி.
English Summary
Eggs hit new high historical high price Egg prices soar