You Can’t See Me… இனி ரிங்கில் இல்லை! தோல்வியுடன் WWE-க்கு விடை சொன்ன ஜான் சீனா...!
You Cant See Me no longer ring John Cena bids farewell WWE defeat
2002-ம் ஆண்டு WWE ரிங்கில் காலடி வைத்த ஜான் சீனா, தனது தனித்துவமான மல்யுத்த பாணியும், மின்னல் வேக தாக்குதல்களாலும் உலகம் முழுவதும் ரசிகர்களை வசீகரித்தார். ‘You Can’t See Me’ என்ற அவரது புகழ்பெற்ற என்ட்ரி இசை ஒருகாலத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களின் ரிங்டோனாக இருந்தது.
WWE வரலாற்றில் 17 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, ராக், டிரிபிள் எச், அண்டர்டேக்கர், ரேண்டி ஆர்ட்டன் போன்ற ஜாம்பவான்களுடன் அதிரடி மோதல்களை நிகழ்த்தியவர் ஜான் சீனா.23 ஆண்டுகளாக WWE-யின் முகமாக திகழ்ந்த அவர், சமீபத்தில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

அமெரிக்காவில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் போட்டிதான் தனது கடைசி ஆட்டம் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 14) காலை 6.30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பான அந்த இறுதி போட்டியில் ஜான் சீனா, கன்தருடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டேப்-அவுட் முறையில் தோல்வியை சந்தித்த ஜான் சீனா, அதே நொடியுடன் WWE ரிங்குக்கு விடை கொடுத்தார்.ரிங்கை சுற்றி நின்ற WWE நட்சத்திரங்களும், உலகம் முழுவதும் ரசிகர்களும் கண்ணீருடன் அவரை வழியனுப்பினர்.
மல்யுத்த அரங்கில் ஒரு யுகம் முடிவுக்கு வந்ததாக ரசிகர்கள் உணர்ந்த அந்த தருணம், WWE வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. இனி ஜான் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா உலகில் செலுத்த உள்ளதாக கூறப்படுவதால், ரிங்கிலிருந்து வெள்ளித்திரைக்கு அவரது பயணம் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது.
English Summary
You Cant See Me no longer ring John Cena bids farewell WWE defeat