மக்கள் புரட்சிக்கு கிடைத்த வெற்றி.. இனி எப்போதும் உயிரை பறிக்கும் மசூர் பருப்பு வாங்காத வகையில் அரசாணை: அரசு அடிபணிந்ததன் பின்னணி..?
மக்களின் தொடர் எதிர்ப்பால், ரேஷனில் மசூர் பருப்பு வினியோகத்தை நிறுத்த, உணவுத்துறை முடிவு செய்துள்ளது.
மக்களின் தொடர் எதிர்ப்பால், ரேஷனில் மசூர் பருப்பு வினியோகத்தை நிறுத்த, உணவுத்துறை முடிவு செய்துள்ளது.
பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து வெளிச் சந்தையில் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், முந்தைய ஆட்சியில், கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு கிலோ ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் கிலோ ரூ.25 என்ற விலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு தேவையான பருப்பு வகைகள் மற்றும் பாமாயிலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. இதில் தான் ஊழலும், முறைகேடுகளும் தலைவிரித்தாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சமீப காலமாக துவரம் பருப்பிற்கு பதில் மசூர் பருப்பை தான் ரேசனில் வழங்குகிறா்கள். இந்ந பருப்பால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி 10 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த இரண்டு மாதமாக ரேசன் கடைகளில் நியோகிக்கிறார்கள். இப்போது உளுத்தம் பருப்பையும் தடை செய்துள்ளார்கள்.
தற்போது விநியோகம் செய்யப்படும் பருப்பு தரமற்று சுவை இல்லாமல் இருந்ததால், அதை மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.
சில ஊழியர்கள், மக்களுக்கு விற்றது போல, கடையில் பதிவு செய்து விட்டு, மசூர் பருப்பை, கள்ளச்சந்தையில் விற்றனர்.
இதனால், மசூர் பருப்பிற்கு பதில், துவரம் பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, ரேஷன் ஊழியர்களும், பொதுமக்களும் புகார் அனுப்பினர்.
இதையடுத்து, தற்போது, 154 கோடி ரூபாய்க்கு, 25 ஆயிரம் டன் துவரம் பருப்பு அல்லது கனடா பருப்பு வாங்க, வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இனி, எப்போதும், மசூர் பருப்பு வாங்காத வகையில், அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.