படிப்பை நிறுத்தக்கூடாது: மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கலெக்டர்!
Education must not be stopped Collector makes a plea to students
எந்த சிக்கல்கள் இருந்தாலும் மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சமும், PM cares for children திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று இந்த திட்டத்தில் பயன்பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடி, அவர்களின் எதிர்கால திட்டம் குறித்து கேட்டறிந்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த கலந்துரையாடலில் கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது:கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 5 லட்சமும் மற்றும் PM cares for children திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு நிதி ஆதரவு தொகை, ஸ்காலர்ஷிப் மற்றும் பராமரிப்பு செலவு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மிஷன் வத்சால்யா நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 4,000 வழங்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.
உங்களுக்கு மருத்துவத்துறை சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மனநல திட்டம் சார்பில் உங்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இதை தவிர உங்களுக்கு வேறு சில சிக்கல்கள் இறுக்கிறதா, அல்லது மருத்துவ உதவி தேவைபடுகிறதா, மருத்துவ உதவி செய்ய முடியாத குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக மருத்துவ முகாம் நடத்துகிறோம்.
இந்த குழந்தைகள் அனைவரையும் உயர்கல்வியில் கொண்டு சேர்க்க வேண்டும். நமது மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளையும் உயர்கல்விக்கு சேர்ப்பதில் பெறும் முயற்சி எடுத்து வருகிறோம். அதில் பெற்றோர்களை இழந்த 25 குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களையும் உயர்கல்வியில் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் உள்ளது. மாவட்ட ஆட்சியரும் உங்களுக்கு ஒரு பாதுகாலவர் தான். இந்த குழந்தைகளை உங்களால் பாதுக்காவோ அல்லது படிக்க வைக்க முடியவில்லை என்றால் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து உரிமையோடு கேட்க வேண்டும். திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வந்து கூட உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் கேட்கலாம்.
பெற்றோர்கள் இல்லாவிட்டாலும் சரியான வழிகாட்டுதல் கிடைக்காமல் இருக்கக் கூடாது. இங்கு வந்திருக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிப்பவர்கள். வருங்காலத்தில் நீங்கள் நல்ல இடத்திற்கு சென்றடைவீர்கள். எந்தவொரு சிக்கல்கள் இருந்தாலும் சரி நிச்சயமாக உங்கள் பள்ளி படிப்பையோ, கல்லூரி படிப்பையோ நிறுத்தக்கூடாது என்பது என்னுடைய தாழ்வான வேண்டுகோள்.இவ்வாறு அவர் பேசினார்.
English Summary
Education must not be stopped Collector makes a plea to students