முதுகலை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை தகவல்..! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளை பொறுத்தவரையில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அந்த அறிவுறுத்தலின்படி, மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சமாக 30 மாணவர்களும், மற்ற ஊரக பகுதியாக இருந்தால் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அந்தப் பிரிவில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், அதற்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்யும் போது, ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா? என்று கண்காணிக்க வேண்டும். போதிய பாடவேளை இல்லாமல் இருக்கும் முதுகலை ஆசிரியரை கீழ்நிலை வகுப்புகளான 9,10-ம் வகுப்புகளுக்கு கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்யவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்த புள்ளி விவரங்களை அந்தந்த பள்ளிகள் தயார்செய்து, அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக, பள்ளிக்கல்வி ஆணையரகத்துக்கு வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department order for postgraduate teachers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->