அதிமுக ஆட்சியால்.. அரசுப்பள்ளி மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது- எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


‌தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 3 நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 3 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுகான நேரடி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் வரும் 30ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.

இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வில் 541 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி ஆணை பெற்றனர். அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைதுள்ளது.

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிட, எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசால் உருவாக்கப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டாலும், கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற ஆணையாலும் இந்தாண்டு 500க்கும் மேற்ப்பட்ட ஏழை,எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகிருப்பதில் மட்டட்ற்ற மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edapadi pazhanisamy speech about medical Counciling 7.5%


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->