டாஸ்மாக் ஊழல்! ஆகாஷ் பாஸ்கரனை எப்படி விசாரிக்கலாம்? அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
ED TASMAC Case Chennai HC
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனை எந்த அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது? எனஅமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் முறைகேடின் பேரில், இருவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, விக்ரம் ரவீந்திரனின் சொத்துகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து, இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "சோதனை நடத்தலாம்; ஆவணங்களை பறிமுதல் செய்யலாம். ஆனால் வீடுகளுக்கு எப்படி சீல் வைக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு அமலாக்கத் துறை தரப்பில், "சோதனைக்கு சென்றபோது வீடுகள் பூட்டியிருந்தன. அதனால் நோட்டீஸ் ஒட்டிய பின் சீல் வைக்கப்பட்டது. ஒரு மாதம் இருவரும் தலைமறைவாக உள்ளனர். விசாரணை நீடித்து வருகிறது" என்றது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "வீடு பூட்டியிருந்தால், போலீசார் உதவியுடன் கதவை திறந்து சோதனை நடத்தக்கூடாதா?" என தெரிவித்தனர்.
மேலும், இவ்வழக்கில், விசாரணையின் அடிப்படை மற்றும் அதிகாரத் தளத்தை தெளிவுபடுத்தி அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
English Summary
ED TASMAC Case Chennai HC