பெட்டி பெட்டியாக முக்கிய ஆவணங்கள்! மொத்தமாக அள்ளிய ED! 3வது நாளுடன் சோதனை நிறைவு! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரி அதிபர்களின் வீடு மற்றும் அலுவலகம், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகம், அரசு ஊழியர்களின் வீடு மற்றும் அலுவலகம், அரசு மணல் குவாரிகள் ஆகிய இடங்களில் நடைபெற்ற வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையானது நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முறைகேடாக மணல் விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 75க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரி அதிபர் ரத்தினம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு அவருடைய மகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவது குறித்து தகவல் அறிந்த ரத்தினம் தற்போது தலைமுறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான நபராக கருதப்படும் மணல் குவாரி அதிபர் ரத்தினத்தின் நெருங்கிய உறவினரான கரிகாலன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனை நிறைவு பெற்றாலும் புதுக்கோட்டையில் உள்ள ராமச்சந்திரனின் அலுவலகத்தில் மற்றும் மூன்றாவது நாளாக இன்று சோதனை தொடர்ந்தது.

இன்று நடைபெற்ற சோதனையின் போது கிடைத்த பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றி சென்றனர். மணல் விற்பனையின் போது லாரிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றுள்ளனர். அரசு மணல் குவாரியில் நடைபெற்ற மணல் விற்பனை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதால் அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பி மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raid completed at Ramachandran related places


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->