2024 நாடாளுமன்றத் தேர்தல் பணியை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.!!
EC has started 2024 parliamentary election work
நாடாளுமன்ற பொது தேர்தல் 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனை இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது.

இந்தக் சோதனையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழக முழுவதும் போதுமான வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை கையிருப்பில் இருக்கும் எண்ணிக்கை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் ஆகியவற்றை சரி பார்ப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
தமிழக முழுவதும் பூத் வாரியாக எவ்வளவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி க்ஷபேட் இயந்திரம் தேவைப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில் பிற மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனை நிறைவு பெற்ற பிறகு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி துவங்க உள்ளது. மேலும் அனைத்து வாக்குக்கு பதிவு இயந்திரங்களும் சோதனை செய்த பிறகு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனை நடைபெறும்.
இதன் மூலம் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
EC has started 2024 parliamentary election work