தொடர் நிலநடுக்கம் - பீதியில் நடுங்கும் பிலிப்பைன்ஸ் மக்கள்.!
earthquake in philipines
கடந்த சில காலமாகவே பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், நாட்டின் மிண்டானாவ் நகரில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது மிண்டானாவ் நகரில் பூமிக்கு அடியில் 82 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. ஆனால், இதுவரைக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. மேலும், எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேபோன்று, கடந்த 2-ம் தேதி அன்றும் பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, அது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமும் பிலிப்பைன்சின் மிண்டானாவ் நகர் அருகே ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது.