சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல்முறையாக இ-பைக் வாடகை சேவை தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, இ-பைக் (மின்சார இருசக்கர வாகனம்) வாடகை சேவையை முதல் முறையாக ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த இ-பைக் வாடகை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை ரயில்வே கோட்டத்தின் கூடுதல் ரயில்வே மேலாளர் ஐ.செந்தில்குமார் இன்று (செப்.17) வியாழக்கிழமை திறந்து வைத்த நிலையில், இந்நிகழ்ச்சியில், ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மின்சார இருசக்கர வாகனம் மையம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக, இந்த மையத்தில் தற்போது 20 இ -பைக்குகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகள் இந்த இ-பைக்குகளை வாடகைக்கு எடுக்கலாம். இது, வாகனச் செலவுகளைச் சார்ந்திருக்காமல், சிக்கனமான பயணத்தை உறுதி செய்கிறதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தினசரி வேலைக்குச் செல்வோர் மற்றும் பிற ஊர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகக் குறைந்த கட்டணத்தில், எளிதான போக்குவரத்துத் தேர்வாக அமையும் என்றும், கூறியுள்ளனர்.

மேலும், இத்திட்டம் 03 ஆண்டுகால பயணிகளின் கட்டணம் அல்லாத பிறவருவாய் ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறதாகவும், இதன் மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.7.17 லட்சம் வருவாய் கிடைக்கும். அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

E bike rental service launched for the first time at Chennai Central Railway Station


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->