துரை. சந்திரசேகரன் எழுதிய உரிமைக் காவலர் தந்தை பெரியார் நூல்..எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வெளியிட்டார்!  - Seithipunal
Seithipunal


திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் எழுதிய,மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் என்ற நூல் அறிமுக விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினர்.

 திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் நூல் அறிமுக விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்  நடந்தது.

புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் வே. அன்பரசன் வரவேற்று பேசினார்.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் எனும் நூலை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை வழங்கினார்.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் இரா. விசுவநாதன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து தமிழ் நாலை கலைமாமணி செந்தமிழ்ச் செம்மல் சீனு. வேணுகோபால் அவர்களும் ஆங்கில நூலை கவிஞர் முத்துவேல் இராமமூர்த்தி அவர்களும் ஆய்வுரை நிகழ்த்தினர். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆடிட்டர் கு. இரஞ்சித்குமார், துணைப் பொதுச்செயலாளர் வி. இளவரசி சங்கர், திராவிடர் கழக மாவட்ட காப்பாளர்கள் இரா. சடகோபன், இர. ராசு, மாவட்ட செயலாளர் தி. இராசா, பொதுக்குழு உறுப்பினர்கள் கி. அறிவழகன், லோ. பழநி, விலாசினி இராசு, பகுத்தறிவாளர் கழக தலைவர் நெ. நடராசன், துணைத் தலைவர் மு. குப்புசாமி, திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் ஜெ. ஜீவன் சார்வாகன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில திராவிடர் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Durai Chandrasekarans book Right Defender Thanthai Periyar Leader of the Opposition R Siva published


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->