அதிக நேர விளம்பரத்தால் ரயில் வருகை/புறப்பாடு தெரியாமல் பரிதவிக்கும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


ரயில் ஏற வருபவர்கள் நடைமேடை எண் தெரியாமல் ரயிலை தவறவிடும் அவலம்!

சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தின் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து இரயில்கள் இயக்கப்படுகின்றன.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.  தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, கரூர், சேலம், மதுரை, நாமக்கல், ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் இரயில்கள் இங்கிருந்தும் இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் இரயில்களும் எண்ணூர், கும்மிடிப்பூண்டி மற்றும் அம்பத்தூர், திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னைக் கடற்கரை மார்க்கமாகவும், புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

புறநகர் ரயில்களுக்கு பிரத்யேகமாக 5 நடைமேடைகளும், நீண்ட தூர ரயில்களைக் கையாளும் வகையில் 17 நடைமேடைகளும் உள்ளன. ரயில் நிலையத்திற்கு நுழைவாயில் அறிய பயணிகளின் வசதிக்காக மிகப்பெரிய டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ரயில் புறப்படும் நேரம் எந்த நடைமுறையில் வரப்போகிறது என எளிதில் அறிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளது.

 இதனால் பயணிகள் விரைவாகவும் சரியாகவும் ரயிலில் பயணம் மேற்கொள்ளவும் எளிமையாக உள்ளது. இந்நிலையில் அந்த டிஜிட்டல் பாட்டில் தற்பொழுது ரயில் பயண அறிவிப்பை விட அதிக அளவு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகிறது. ரயில் புறப்படும் நேரம் அறிய மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பலர் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயிலை தவிர விடுகின்றனர். பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியம் விளம்பர நேரத்தை குறைக்க வேண்டும் எனவும் அல்லது  விளம்பரங்களுக்கு என தனியாக டிஜிட்டல் போர்டை நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to long advertisement the public is suffering without knowing the departure of the train


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->