புரட்டி எடுக்கும் கனமழையால் திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!
Due to heavy rain thiruvarur district school tomorrow holiday
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் இன்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது.

மேலும் நாளை புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரையும், கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது நாளையும் தொடரும் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
English Summary
Due to heavy rain thiruvarur district school tomorrow holiday