சென்னை கனமழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி!
Due to heavy rain in Chennai woman died
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதை அடுத்து நேற்று முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கிய மழையானது இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னை சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் முயற்சசியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பை அடுத்த பிரகாஷ் ராவ் காலணியில் வசித்து வரும் சாந்தி என்ற பெண் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வாசலில் கோலம் போடுவதற்காக சென்றபோது மேற்கூரை இடிந்து விழுந்து பலியாகி உள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று நேற்று இரவு வியாசர்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தேவராஜ் என்பவர் நடந்து சென்ற பொழுது மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு இரு வேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை தொடர்வதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Due to heavy rain in Chennai woman died