தீவிர வாகன சோதனையில் சிக்கிய போதை கும்பல்...! நெல்லையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நத்தோடு தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த சங்கர்ராஜா (24) என்பவரை தடுத்து நிறுத்தி காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில், அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை நோக்கில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, சங்கர்ராஜாவை கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவும், பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், குற்றச்சாட்டுக்குட்பட்ட சங்கர்ராஜாவை நீதிமன்ற காவலில் அடைக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug gang caught intensive vehicle search Youth arrested 1 kg 100 grams ganja paddy


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->