ஒடிசா ரயில் விபத்து || மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.. டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் அரங்கேறிய ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் "இந்தியாவினுடைய வரலாற்றில் கடந்த 20 வருடங்களில் நடந்திடாத ஒரு கோர ரயில் விபத்தில் நடந்து இரண்டு தினங்கள் ஆகின்றன. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதன் விளைவாக ஏற்பட்ட அந்த ரயில் விபத்து குறித்து இரண்டு தினங்கள் ஆகியும் கூட அதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்பது ஏற்புடையது அல்ல.

இந்த விபத்து குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வருகின்றன. முதலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை விளக்கு கட்டப்பட்டது எனவும், பச்சை விளக்கு காட்டப்பட்டு லூப் லைனுக்கு மாற்றி விடப்பட்டது எனவும், அந்த பகுதியில் மின் கம்பி துண்டிக்கப்பட்டு கிடந்தன என பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

இந்த நேரத்தில் அதிகாரிகள் வெளிப்படையான காரணத்தை தெரிவித்து இருக்க வேண்டும். 300 பேரில் மரணம் என்பது எளிதான விஷயம் அல்ல. நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே துறைக்கு இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு சிஏஜி அறிக்கைப்படி ஆண்டுக்கு 4000 கிலோமீட்டர் இருப்பு பாதையை பராமரிக்க வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என கொடுத்த அறிக்கையின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் வருகிறது.

அதேபோல கவச் என்று அழைக்கப்படக்கூடிய விபத்து தடுப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை என்ற தகவலும் வருகிறது. ஒட்டுமொத்தத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது மட்டும் தெளிவாகிறது. இவ்வளவு குறைபாடுகள் இருந்தால்தான் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த காரணம் தெரிந்த பிறகும் கூட இதற்கு ஏன் யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. கடந்த காலங்களில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது அத்துறையின் அமைச்சர்கள் பொறுப்பேற்று ராஜினாமா செய்வார்கள். 

இந்தியாவின் ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் தார்மீக பொறுப்பேற்று தனது பதிவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த நிமிடம் வரை அவர் ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்வது தான் குறைந்தபட்சம் அந்த 300 பேரின் மரணத்திற்கு செலுத்தக்கூடிய மரியாதையாகும். அப்போதுதான் தைரியமாக கோடான கோடி பேர் இந்திய ரயில்வே நம்பி பயணம் செய்ய முடியும். 

மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்தவித சுணக்கமும் காட்டாமல் காலம் தாழ்த்தாமல் இரண்டு தினங்களில் எந்த காரணத்திற்காக விபத்து ஏற்பட்டது என்பதை நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இந்த இரண்டு தினங்களே அதிகம். எனவே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் 300 பேரின் மரணத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். அது நாகரீகமான முன்னுதாரணமாக அமையும். இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என தனது காணொளியில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrKrishnasamy insists that the Central Railway Minister should be resign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->