மாநகர பேருந்துகளை ஓட்டுனர் மட்டும் தான் இயக்க வேண்டும் - போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மாநகரப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- "நம்முடைய மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் பேருந்து நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தகவல் வருகிறது. 

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், மத்திய பணிமனையில் கடந்த மாதம் 28.01.2023 அன்று பேருந்து நடத்துநர் ஒருவர் ஓட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீசல் பங்கினை இடித்து சேதபடுத்தியுள்ளது. 

இதன் காரணமாக, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்க கூடாது. இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் கிளைமேலாளர்கள் மற்றும் பணியிலுள்ள மேற்பார்வையாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 

இந்த தகவலை கிளைமேலாளர்கள் பனிமனைகளில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்கள் என்றுஅ அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும், இதனை பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் " என்று இந்தச் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver only drive to city buses transport department notification


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->