முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கால்டாக்சி டிரைவர் கைது..!! - Seithipunal
Seithipunal


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கால்டாக்சி டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் ஆலந்துறையை சேர்ந்தவர் விவேக் . இவர் அந்த பகுதியில் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு பெற்றொர் எதிர்ப்பு தெரிவிக்கவே இவரும் தங்கள் காதலை கைவிட்டனர்.

இதனை அடுத்து, விவேக்கிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும், அவர் அந்த இளம்பெண்ணை தொல்லை செய்து வந்துள்ளார். தினம் அவர் செல்லும் வழியில் எல்லாம் அவரை தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று அவர் பேருந்துக்காக காத்திருந்த போது அந்த மாணவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், பயந்து போன அந்த இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விவேக்கை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver arrested for sexual harassment


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal