பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு - சென்னை மாநகர போக்குவரத்து கழகம்.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 

"பள்ளி மற்றும் கல்லூரிக்கு பேருந்துகளில் செல்லும் மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பேருந்துகளில் ஏறும் போதும், பயணம் செய்யும் போதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்யவதற்காக, ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது தொடருவதால் மீண்டும் கீழ்க்கண்ட இயக்க நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கு வலியுறுத்தப்படுகிறது. 

அதன் விவரம் பின்வருமாறு :- "பேருந்து செல்லும் வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்குமாறு மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். 

மாணவர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அறிவுரையை கேட்காமல், கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுனர் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது போலீஸ் அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும். 

பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver and conductor responsibility to safety for students travel in bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->