இன்மை இருள் விலகி இன்ப ஒளி பரவ தீபஒளித் திருநாள் - மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மத்தாப்பு ஒளிகளின் விழாவான தீபஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தீபஒளித் திருநாளுக்கான மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படைக் கூறுகள் அனைத்தும் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் உணவு படைக்கும் வேளாண்மைத் தொழில் சிறக்க வேண்டும்.  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் உழவுத் தொழில் லாபகரமாக அமைந்துள்ளது.  உழவர்களுக்கு உண்மையான தீபஒளித் திருநாளாக நடப்பாண்டு தீபஒளித் திருநாள் அமைந்துள்ளது.  இந்த ஆண்டை போலவே அனைத்து ஆண்டுகளும் உழவர்களுக்கு மகிழ்ச்சியாக அமைய வேண்டும்.

இந்த ஆண்டில் உழவு செழித்ததைப் போல உலகம் செழிக்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை. கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரம், தொழில்துறை, வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கி விட்டது. அதனால் நடப்பாண்டு தீபஒளி அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையவில்லை. இந்நிலை மாற வேண்டும்... இனிவரும் தீப ஒளிகளில் மகிழ்ச்சி மலர வேண்டும்.

தீபஒளித் திருநாள் மத்தாப்புகளால் ஏற்படுத்தப்படும் வண்ணங்களையும், ஒளிகளையும் மட்டும் கொண்டதாக இருக்கக் கூடாது; மாறாக,  மக்களின் வாழ்க்கையில் இன்மையை விலக்கி, இன்பத்தைப் பெருக்கி வளமும், நலமும் கொண்டதாக மாற வேண்டும். அத்தகைய இன்பத்தை மட்டுமின்றி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட நல்லவை அனைத்தும் மத்தாப்பின் வண்ணங்களாய் நிறைய தீபஒளித் திருநாள் வகை செய்ய வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Deepawali Wishes 13 November 2020


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal