வரதட்சணைக் கொடுமை: சென்னை பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் விஞ்ஞானி கணவர் கைது!
dowry torture suicide samira case
சென்னை: அம்பத்தூர் ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஹசாருதீன் (31). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். இவரது மனைவி ஹுருல் சமீரா (29). இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 11 மாதங்கள் ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி, ஹுருல் சமீரா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை மற்றும் கைது
ஹுருல் சமீராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அம்பத்தூர் கோட்டாட்சியர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், ஹுருல் சமீராவின் கணவர் ஹசாருதீன், அவரை வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியது தெரியவந்தது.
கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் தலைமறைவாக இருந்த ஹசாருதீனைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
dowry torture suicide samira case