அதற்காக கவலைப்பட வேண்டாம்..தொண்டர்களை ஊக்கப்படுத்திய அதிமுக!
Dont worry about that AIADMK encouraged the activists
கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் பேசும் பாஜக பொறுப்பாளர் மற்றும் ஏஜென்ட்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க ஆலோசனைக் கூட்டம் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.கழக பொதுச்செயலாளர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், ஆற்றல்மிக்க எதிர்கட்சி தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மக்கள் விரும்பும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி நடத்தும் விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வருவார். அதற்கான பல்வேறு விகங்களை அமைத்து செயல்படும் கழகப்பொதுச்செயலாளரை பின்பற்றி நாமும் கழக பணியாற்றி தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும் போது புதுச்சேரியிலும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம் :2
புதுச்சேரியில் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின், முஸ்லீம் விரோத போக்கால் வஃக்பு வாரியம் அமைக்காமல் அம்மக்களுக்கு துரோகம் இழைத்தனர். தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைக்கப்பட வேண்டிய வஃக்பு வாரியத்தை இன்று வரை அமைக்காமல் இருப்பது, அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயலாகும். கடந்த 10 ஆண்டுகளாக வஃக்பு வாரியம் அமைக்கப்படாததை கருத்தில் கொண்டு இதற்கு மேலும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக முஸ்லீம் சமுதாய மக்களின் நலனுக்கான வஃக்பு வாரியத்தை உடனே அமைக்க மேதகு துணைநிலை ஆளுநரும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :4
மது விலக்கு இல்லா புதுச்சேரி மாநிலத்தில் கூடுதல் வருவாயை பெருக்க உணவு விற்பனை செய்யும் ரெஸ்டாரெண்டுகளில் உணவருந்துவோர்களுக்கு டூரிசம் கேட்டகிரியில் எஃப்.எல்-2 சில்லரை மதுபான விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை பெற்றுக்கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் மேலைநாட்டு இசைக்கேற்ப ஜோடி ஜோடியாக அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவது, டி.ஜே நடனங்கள், டிஸ்கோத்திக் நடனங்கள் உள்ளிட்டவைகளை எவ்வித அனுமதியுமின்றி நடத்த அனுமதிப்பது என்பது சட்டவிரோத செயலாகும்.
டூரிசம் கேட்டகிரியில் எஃப்.எல்-2 லைசென்ஸ் பெற்று சட்டத்திற்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, கலால்துறை, நகராட்சி நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவைகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு அவமதிப்பையும், கலங்கத்தையும் தேடித்தரும் செயல் என்பதை உணர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சட்டத்தை மீறும் ரெஸ்டோபார்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறேவேற்றப்பட்டது .
English Summary
Dont worry about that AIADMK encouraged the activists