'அமெரிக்க செயற்கைக்கோளை அடுத்த மாதம் விண்ணில் செலுத்தவுள்ளோம்'; இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் செயற்கைக்கோளை, வணிக ரீதியாக அடுத்த மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் நாராயணன் கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 2040-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களும் இருக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றை இஸ்ரோ விண்ணில் செலுத்தள்ளதாகவும், இன்னும் அது குறித்த தேதி முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, அநேகமாக அடுத்த மாதஹதில் அது நடக்கும் என்றும் அறிவித்துள்ளார்.  அதாவது, தொலைத்தொடர்பு செயற்கைக்கோள். எல்விஎம்3( Launch Vehicle Mark III) மூலம் அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும், இது கூட்டுத்திட்டம் கிடையது. வணீக ரீதியில் மட்டுமே செயல்படுத்த உள்ளோம் என்று நாராயணன் கூறியுள்ளார்.

தற்போது விண்ணில் 57 செயற்கைக்கோள்கள் உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 03 மடங்காக அதிகரிக்கும் என்றும், இந்திய வீரர்களை, விண்வெளிக்கு பத்திரமாக அனுப்பி, மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பூவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாகவும், சந்திரயான்-4 மற்றும் 5 ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், சந்திரயான் -4 திட்டம் 2028-இல் செயல்படுத்தப்படும் என்றும், ஜப்பானின் விண்வெளி மையத்துடன் இணைந்து சந்திரயான் -5 செயல்படுத்தப்படவுள்ளதகவலும் அறிவித்துள்ளார்.

புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றில் செயற்கைக்கோளுக்கான தேவை அதிகமாகள்ளது. அதனை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ள தோடு, இந்தியாவுக்கு என சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டவும் பணியாற்றிவருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISRO chief announces that an American satellite will be launched next month


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->