வாக்குரிமை தவற விடாதீர்கள்! வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இன்று இறுதி அவகாசம்...!
Dont miss your right vote Today last day voter list revision
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) கணக்கெடுப்பு கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தமாக 5.43 கோடி வாக்காளர்கள் பதிவாகியுள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதில், உயிரிழந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரி மாற்றம் அல்லது வசிப்பிடத்தில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை பெற்றிருந்தவர்கள் 3.98 லட்சம் பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
அந்த அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரைவு பட்டியலில் இடம் பெறாதவர்கள் இன்று கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தாலும், இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே திருத்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக சரிபார்க்கப்பட்டு, பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
Dont miss your right vote Today last day voter list revision