'பயப்பட தேவலை... இ 20 சேஃப் தான்'...! - வாகன ஓட்டிகளின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த எண்ணெய் நிறுவனங்கள்...!
Dont be afraid E20 is safe Oil companies put an end to motorists doubts
இ20 பெட்ரோல் தொடர்பாக நுகர்வோர் மத்தியில் நிலவி வரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட விரிவான தரப் பரிசோதனைகளின் அடிப்படையில், இ20 பெட்ரோலை நுகர்வோர் எந்தவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எரிபொருளின் தரம் மத்திய அரசின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே பராமரிக்கப்பட்டு வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.

இ20 பெட்ரோலில் குளோரைடு அளவு 500 பிபிஎம் வரை இருப்பதாக பரவி வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குளோரைடு அளவு 0 முதல் 3 பிபிஎம் வரையிலான பாதுகாப்பான அளவிலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளுடன் தண்ணீர் கலப்பு ஏற்படுகிறதா என்பதைக் கண்டறியும் சோதனைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் தினசரி பல முறை தண்ணீர் கசிவு தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டு, எரிபொருளின் தரம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்பின் கூட்டுப் பணிக்குழு சார்பில் நாடு முழுவதும் உள்ள 80 எத்தனால் உற்பத்தி ஆலைகளிலும் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வுகளின் மூலம் எரிபொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எத்தனால் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தரமும் முறையாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில், இ20 பெட்ரோலின் தரம் குறித்து நுகர்வோர் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எரிபொருளின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், நுகர்வோர் எந்தவித தயக்கமும் இன்றி இ20 பெட்ரோலை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் என்றும் அவை தெரிவித்துள்ளன.
இ20 பெட்ரோல் தொடர்பாக நுகர்வோர் மத்தியில் நிலவி வரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட விரிவான தரப் பரிசோதனைகளின் அடிப்படையில், இ20 பெட்ரோலை நுகர்வோர் எந்தவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எரிபொருளின் தரம் மத்திய அரசின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே பராமரிக்கப்பட்டு வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.இ20 பெட்ரோலில் குளோரைடு அளவு 500 பிபிஎம் வரை இருப்பதாக பரவி வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குளோரைடு அளவு 0 முதல் 3 பிபிஎம் வரையிலான பாதுகாப்பான அளவிலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளுடன் தண்ணீர் கலப்பு ஏற்படுகிறதா என்பதைக் கண்டறியும் சோதனைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் தினசரி பல முறை தண்ணீர் கசிவு தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டு, எரிபொருளின் தரம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்பின் கூட்டுப் பணிக்குழு சார்பில் நாடு முழுவதும் உள்ள 80 எத்தனால் உற்பத்தி ஆலைகளிலும் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின் மூலம் எரிபொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எத்தனால் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தரமும் முறையாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில், இ20 பெட்ரோலின் தரம் குறித்து நுகர்வோர் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எரிபொருளின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், நுகர்வோர் எந்தவித தயக்கமும் இன்றி இ20 பெட்ரோலை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் என்றும் அவை தெரிவித்துள்ளன.
English Summary
Dont be afraid E20 is safe Oil companies put an end to motorists doubts