ஆன்லைன் பண மோசடிகளுக்கு வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட விவகாரம்...! தமிழகம் முழுவதும் 800 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை...! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு தங்களது வங்கிக் கணக்குகளை பயன்படுத்த அனுமதித்து, அதற்காக கமிஷன் பெற்றதாக தமிழகம் முழுவதும் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டுவது முதல், அச்சுறுத்தி பணம் பறிப்பது வரை பல்வேறு வழிகளில் இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்படும் பெரும் தொகைகள், பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு பின்னர் எடுக்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி பணத்தைப் பெறுவதற்காக பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை ‘மணி மியூல்’ கணக்குகள் என அழைக்கின்றனர். இத்தகைய கணக்குகளின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பின்னர் அதனை மோசடி கும்பலிடம் ஒப்படைக்கும் நபர்களுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சில இளைஞர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை மோசடி கும்பலிடம் வழங்கியுள்ளனர்.

பின்னர் அந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தை எடுத்து கொடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மோசடி கும்பல்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்கி அவர்களுக்கு துணைபுரியும் நபர்களை கண்டறியும் பணியில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சென்னையில் மட்டும் கடந்த 2 நாட்களில் 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இணையவழி மோசடி தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் மோசடி பணத்தைப் பெறுவதற்கும் பதுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட ‘மணி மியூல்’ வங்கிக் கணக்குகள் தொடர்பாக சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட காவலர்களின் உதவியுடன் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 800 பேரிடமும் அவர்களது வங்கிக் கணக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, யாருடைய அறிவுறுத்தலின் பேரில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன, மோசடி கும்பலுடன் அவர்களுக்கு இருந்த தொடர்பு என்ன என்பது குறித்து காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்கி எளிதாக பணம் சம்பாதிக்க முயல்வது, பின்னர் சட்டரீதியான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

issue renting out bank accounts online money fraud Police action arresting 800 people across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->