ஒட்டு கேட்கும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கரூர் மருத்துவர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கரூரில் உள்ள பண்டரிநாதன் தெருவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மருத்துவமனை நடத்திவரும் பிரபல மருத்துவர் மோகன் என்பவர், தனது மருத்துவமனையுடன் அமைந்துள்ள வீட்டு கதவில் ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை தொங்கவிட்டுள்ளார்.

அதில் மாண்புமிகு வேட்பாளர்கள் அவர்களே *நீங்கள் நேர்மையானவரா? *நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை தருவீர்களா? அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவரா? *வாக்குகளை விலை பேசாதவரா? *மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் செயல்திட்டங்கள் உள்ளவரா? *மக்கள் எளிதாக அணுகக்கூடியவரா? *ஆம் என்றால் வாக்கு கேட்க வருக„ Dr.K.மோகன் என அச்சிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளதாவது:- "வாக்களிக்கும் பொதுமக்கள் மனச்சாட்சியுடன் நடந்து கொண்டு இலவசங்களுக்கும் 500, 1000-க்கும் விலை போகாமல் நியாயமாக வாக்களித்தால், கட்டாயம் அரசியல்வாதிகளும் நியாயமான மனிதர்களாக மாறிவிடுவார்கள். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் நமது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை புரிந்து கொண்டு நாம் வாக்களிக்க வேண்டும். 

இலவசங்களுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு வாக்களித்தால் வருங்கால சந்ததியினர் குடிகாரர்களாகவும், கடன்காரனாகவும் மாறிவிடுவர். முதலில் வாக்களிக்கும் நாம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். நேர்மையாக வாக்களிக்க வேண்டும். நேர்மையான மனிதரை தேர்வு செய்தால் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

doctor election board for candidate in karoor


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->