வேங்கை வயல் விவகாரத்தில் 4 சிறார்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தமிழக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 197வது நாட்களா விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக அறிவிப்பூர்வம் ஆதாரம் சமர்ப்பிப்பதற்கு வேங்கைவையில் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்ற மூலம் சிபிசிஐடி போலீசார் அனுமதி பெற்றனர். முதற்கட்டமாக 11 பேருக்கு கடந்த ஏப்ரல் 27ம் தேதி டிஎன்ஏ பரிசோதனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் 3 பேர் மட்டுமே ஆஜராகியினர். இதனை அடுத்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்று மீதமுள்ள எட்டு பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. 

இதற்கிடையே மேலும் 10 பேருக்கு சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகளை சேகரித்தனர். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் இன்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் வேங்கைவையில் கிராமத்தைச் சேர்ந்த மேலும் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வரும் ஜூலை 12ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், டிஎன்ஏ பரிசோதனை செய்ய உள்ள நான்கு சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DNA test for 4 minors in Vengaivayal case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->