திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!
DMK rajya sabha candidate list
பாராளுமன்ற மாநிலங்களவை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதில் திமுகவின் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ ஆகியோர் அடங்குவர்.
அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கும்.
இதையொட்டி திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் வேட்பாளர்கள் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்கவை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வழக்கறிஞர் வில்சன் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் கவிஞர் சல்மா (ரொக்கையா மாலிக்) மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மேல்சபை உறுப்பினர் இடம் திமுகவின் ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது.
English Summary
DMK rajya sabha candidate list