'நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இவர்கள்தான் காரணம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


சேலத்தில் தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இது குறித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 

என்னை உருவாக்கிய பாசறை தான் இளைஞர் அணி. ஓய்வின்றி உழைக்கிறேன் என என்னை பாராட்டுகிறீர்கள் என்றால் அதற்கு தளத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணி தான். 

தமிழகத்தில் என் கால் படாத இடங்களில் இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்துள்ளேன். தி.மு.கவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞர் அணி தலைமை அமைந்தது. 

நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இளைஞர் அணி தான் காரணம். என்னை சுற்றி ஆற்றல் மிக்க இளைஞர்கள் இருப்பதால் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். 

இளைஞர் அணி வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவர் பொறுப்புக்கு வந்த சிறிய காலத்திலேயே அழிக்க முடியாத கோட்டையை இளைஞர் அணி கட்டி எழுப்பி வருகிறது. 

உதயநிதி ஸ்டாலினிடம் வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு, இனிமையான பரப்புரை போன்றவை இயல்பாகவே இருக்கும். 

கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியது போல என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk youth wing conference MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->