செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. என்ன நிபந்தனை தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் இதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திமுக செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சியரை கடுமையாக வரம்பை மீறி விமர்சனம் செய்தார். கரூர் மாவட்ட ஆட்சியருக்கு யோசனை செய்யும் திறன் இல்லை என்றும், அவர் மாவட்ட ஆட்சியர் பதவியில் இருக்க திறன் இல்லாதவர் என்று தனக்கான வரம்பை மீறி விமர்சனம் செய்து பேசியிருந்தார். 

இது குறித்த விடீயோக்கள் மட்டும் வெளியான நிலையில், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் மீது தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகார் அளித்திருந்தார். செந்தில் பாலாஜியின் மீதான புகார் திமுக வட்டாரத்திடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இது குறித்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கிய உத்தரவிட்டனர். மேலும், 2 வாரத்திற்கு கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK SenthilBalaji anticipatory bail released by Chennai high court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->