நாகை, திருவாரூர் சென்ற விஜய் - திமுக போஸ்டரால் பரபரப்பு.!!
dmk paste posters in nagai and thiruvarur district for vijay came
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தனது பிரசார பயணத்தை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார்.
தனது பிரச்சார பயணத்தை முதலில் திருச்சியில் தொடங்கிய விஜய் பெரம்பலூர் மாவட்டத்தில் முடித்தார். ஒவ்வொரு வார சனிக்கிழமைகளில் தனது பிரச்சாரத்தை நடத்தும் விஜய் இரண்டாம் கட்டமாக நாகை, திருவாரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், நாகை, திருவாரூரில் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் செய்திருந்தனர். விஜய் வருகையையொட்டி இருமாவட்டங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dmk paste posters in nagai and thiruvarur district for vijay came