கொரோனாவின் கோரப்பிடியில் அடுத்த தி.மு.க எம்.எல்.ஏ.. சோகத்தில் தலைமை.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வந்தது. இதனால் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பில் மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்து வந்தனர். 

மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் நடவடிக்கையும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. 

களத்தில் பணியாற்றி வந்த அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள் என பலருக்கும் கொரோனா உறுதியானது. ஏற்கனவே திமுகவில் பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. 

இந்நிலையில், கிருஷ்ணகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MLA Senguttuvan Corona virus positive


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->