திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்.. சோகத்தில் திமுக வட்டாரம்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் திமுக அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள திமுக எம்.எல்.ஏ அன்பழகன், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 24 மணிநேரமாக 80 விழுக்காடு ஆக்சிஜன் வெண்டிலேட்டர் உதவியுடன் ஜெ.அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இவருக்கு தேவையான சிகிச்சையானது தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்று, திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 61 வயதாகும் அன்பழகன், மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகியிருந்தார். 

இதனையடுத்து கொரோனா தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சூழ்நிலையில், ஜெ.அன்பழகனிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திமுகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MLA corona positive J Anbalagan critical condition on hospital


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->